Saturday, 12 December 2015

பழமொழி

பழமொழி

பழமொழி நம் முன்னோர்களின் அனுபவப் பொக்கிசம். அவர்கள் சொல்லி வைத்த பொருள் ஒன்று. இன்று நாம் அதைப்பயன்படுத்தும் பொருள் வேறாக உள்ளது. அதை சரியான பொருளில் பயன்படுத்தினால் நல்லது.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்


திருமணமாகி கணவன் வீட்டிற்க்கு வரும் பெண் அந்த வீட்டாறை பொருத்தவரையில் ஊரான்(அடுத்தவன்) பெற்ற பிள்ளை. அப்பெண் கருவுற்ற நிலையில் அவளுக்கு வேண்டியதை உண்ணக்கொடுத்து அவள் உடல் திறனை வளர்ப்பர். அவளுக்கு உணவு கொடுப்பதால் அவள் வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதே இதன் பொருள்.

Friday, 13 November 2015

அறிமுகம்

நான் முனைவா் ந.கெளாி
கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். தமிழ் இலக்கியங்கள் குறித்த எனது அனுபவப் பகிர்வுக்காக இந்த வலைப்பதிவை உருவாக்கியுள்ளேன்